உடனடிச்செய்திகள்

தோழமை அமைப்புகள்


தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலுக்கு ஆதரவாக இளைஞர்களை ஒன்று திரட்டும் அமைப்பாக தமிழக இளைஞர் முன்னணி விளங்குகிறது.

பான்பராக் – பீடா போன்ற போதைப் பாக்குகளாலும், மது உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்களாலும் இளைஞர்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில், இப்போதைப் பாக்குகளுக்கு த்டை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இப்பாக்குகளைத் தயாரிக்கும் கோத்தாரி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராடியது, 2003இல் புதிதாக சென்னையில் திறக்கப்பட்ட இலங்கை வங்கியை பூட்டுப் போட்டுப் போராடியது, தமிழக இளைஞர்களுக்கு வேலை கொடு அல்லது அதற்கு ஏற்ப வாழ்வூதியம் கொடு என தமிழகமெங்கும் கையெழுத்து இயக்கம் நடத்தியது, டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம், வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும் அட்டை வழங்கக் கூடாதென ஆர்ப்பாடடம் என பல்வேறு செயல்பாடுகளால் தமிழக இளைஞர் முன்னணி தமிழக வரலாற்றில் தடம் பதித்துள்ளது.  

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்  கோ.மாரிமுத்து, தமிழக இளைஞர் முன்ணியின் தலைவராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி பொதுச் செயலாளராகவும், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆ.குபேரன் துணைப் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

இணையம்: http://tnyouthufront.blogspot.com/

தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலுக்கு ஆதரவாக மாணவர்களை ஒன்று திரட்டும் அமைப்பாக தமிழக மாணவர் முன்னணி விளங்குகிறது.

தமிழ் வழிக்கல்விக்காக பரப்புரை இயக்கம், தனியார் மெட்ரிக் கல்வி நிறுவன மோசடிகளை எதிர்த்து பரப்புரை இயக்கம், வெளிமாநில மாணவர்கள் ஆக்கிரமிப்பால் தமிழக மாணவர்களுக்கு தமிழ் பயிற்று மொழி மறுக்கப்பட்டமையை எதிர்த்துப் போராட்டம் என தமிழக மாணவர் முன்னணி தனக்கெனத் தனித்தப் போராட்ட வரலாற்றைக் கொண்டு இயங்குகிறது.

தோழர் வே.சுப்ரமணிய சிவா, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளராக செயல்பட்டு வருகின்றார்.

தமிழ்த் தேசிய விடுதலை இலட்சியத்தை கலை இலக்கியப் படைப்புகளாக வெளிக் கொணரும் படைப்பாளிகளையும், படைப்பிலக்கியங்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது. கதை – கவிதை – உரைநடை இலக்கிய விமர்சனங்கள், திரைப்படத் திறனாய்வுக் கூட்டங்கள் என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வரும், த.க.இ.பே. புதியப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது.

த.க.இ.பே. தலைவராக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் அவர்களும், செயலாளராக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை அவர்களும் செயல்பட்டு வருகின்றார்.

மகளிர் ஆயம்
தமிழ்த் தேசிய விடுதலையை இலட்சிய இலக்காகக் கொண்டு, மகளிரைத் திரட்டும் வகையில் மகளிர் ஆயம் அமைப்பு 2008ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கியது. தமிழீழ இனப்படுகொலையை எதிர்த்தும், போர் நிறுத்தம் வேண்டியும் மகளிர் ஆர்ப்பாட்டங்கள், இராசபக்சேவை போர்க் குற்றவாளியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்திப் கண்டனப் பேரணி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் என தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளை மகளிர் ஆயும் முன்னெடுத்து வருகின்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மதுரை அருணா, மகளிர் ஆயத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றார். 

2009 தமிழீழ இன அழிப்புப் போரை சிங்கள இனவெறி அரசு நடத்திக் கொண்டிருந்த சூழலில், மாவீரன் முத்துக்குமார் கட்சி எல்லைகளைக் கடந்த இளைஞர்களை ஒருங்கிணைக்க விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து, ஓர் புதிய அமைப்பாக இந்நோக்கில் இளந்தமிழர் இயக்கம் செயல்படத் தொடங்கியது.

தமிழீழ விடுதலையை தமிழக கிராமங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்பட்ட பரப்புரை இயக்கம், காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரை, தமிழீழ இனப்படுகொலை குறித்து ஆயிரக்கணக்கில் குறுந்தகடுகள் தயாரித்த விநியோகித்த்து, தமிழினப் பகைவன் காங்கிரசு முன்னாள் அமைச்சர் ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டது என பல்வேறு செயல்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்த்து இளந்தமிழர் இயக்கம். 2009 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையில், காங்கிரசு வேட்பாளர் மணிசங்கர் அய்யர் தோற்றதற்கு இளந்தமிழர் இயக்கம் முக்கியக் காரணம் என குமுதம் ஏடு எழுதியது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகின்றார்.

இணையம்: http://elanthamizhar.blogspot.com/

உலகமயத் தாக்குதல் மற்றும், அண்டை மாநிலங்களின் நீர் முற்றுகை ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டின் வேளாண்மையைக் காக்க தேர்தல் கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழக உழவர்களைத் திரட்ட வேண்டிய கடமையை நிறைவேற்ற தமிழக உழவர் முன்னணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கட்சி எல்லைகளைக் கடந்து இவ்வமைப்பின் கீழ் திரண்டுள்ள உழவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வென்றெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகின்றார். 

இணையம்: http://tamilfarmer.blogspot.in/

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT